'டிமான்டி காலனி',  'இமைக்காநொடிகள்', ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக நடிகர் சியான் விக்ரம் நடிக்கவுள்ள 58 வது, படத்தை இயக்கவுள்ளார்.  இந்த படத்தில் விக்ரம் ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கவுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏற்கனவே இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை பிரியா பவானி சங்கர் டேட் பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஹீரோயினாக நடிகை ஸ்ரீநிதி செட்டியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி, கடந்த வருடம் தெலுங்கில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான' 'கேஜிஎஃப்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த படத்தில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை வியாகாம் 18 பிக்சர்ஸ் நிறுவகணம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.