சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து பின் கதாநாயகனாக உயர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ரசிகர்களுடன் மிகவும் எளிமையாக பழகுவதால் இவரை பலருக்கும் பிடிக்கும்.

ஹீரோவாக உயர்ந்து விட்டால் ,சிங்கிள் ஹீரோ கான்செப் படங்களில் தான் நடிப்பேன்.. இப்படிப் பட்ட கதாப்பாத்திரத்தில் தான் நடிப்பேன் என சில நடிகர்கள் கூறும் நிலையில் இவர் துணிச்சலாக அனைத்து கதாப்பாதிரங்களிலும் தேர்வு செய்து நடித்து அசத்துவார். 

குடும்பம்:

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெர்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இவருக்கு சூர்யா என்கிற மகனும் ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர். 

ஏற்க்கனவே இவருடைய மகன் 'நானும் ரவுடிதான்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஜிங்கா படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் ஸ்ரீஜாவை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய மகள் ஸ்ரீஜாவுடம் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த உலகத்திற்கு காட்டியுள்ளார் விஜய்சேதுபதி.