vijaysethupathy acting for amy jackson
முன்னனி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள விஜய் சேதுபதியின் படத்தில் நாயகியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் கால்ஷீட் கொடுக்க காத்திருக்கின்றனர்.
காரணம் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும், வெற்றி பெற்றது... அவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் 'கவண்' மற்றும் 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தாயாராக உள்ளது, அதே போல்' வடசென்னை','96', 'கறுப்பன்' போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார், மேலும் இதற்குத்தானே 'ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனர் கோகுலுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க எமி ஜாக்ஸனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படப்பிடிப்பு முடிந்து சென்னையில் குடியேர உள்ள எமி ஜாக்சன், லண்டன் சென்று திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.
