vijaysethupathy acting 8 getup
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் நடிப்பவர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது விஜய் சேதுபதி அரை டஜன் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் ‘மேற்கு தொடர்ச்சிமலை’ என்னும் படத்தில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் விஜய் சேதுபதி “நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி எட்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதே படத்தில் நடிகர் கெளதம் கார்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கவிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் இவர் நடிக்கும் ஒரு வேடம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், மற்ற கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர் படக்குழுவினர்.
அதே போல இவருடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
