ஒரே மாதிரியான கெட்டப்புகளில் நடிப்பதை தவிர்த்து, பல கெட்டப்புகளுக்கு தங்களையே மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்கள், தற்போதைய நடிகர்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து சொல்லவே வேண்டாம், உடல் எடையை அதிகமாக குறைக்காமல், தன்னனுடைய பேச்சு வழக்கை மாற்றாமல் படத்திற்கு படம் தன்னுடைய  கெட்டப்பில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார்.

“சூதுகவ்வும்”, “ஆரஞ்சு மிட்டாய்”, ஜூங்கா, சூப்பர் டீலக்ஸ் என இவருடைய கெட்டப்புகளும் அதிகரித்து கொண்டே போகிறது. 

இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் செக்கசிவந்த வானம் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'பேட்ட' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி கடும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் வயாதான தோற்றத்தில் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் தான் அது. இந்த புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி என்றும், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைசி விவசாயி' படத்தில் அவரின் தோற்றம் இது என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த புகைப்படம் லைக்குகளை வாரி குறிவைத்து.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஏன் தெரியுமா?  விஜய் சேதுபதியின் புகைப்படம் என்று வெளியானது... அவருடைய புகைப்படம் இல்லையாம். 

அந்த புகைப்படத்தில் இருப்பவர் பெயர் கிருஷி. இவர் ஒரு இலக்கிய  விமர்சகர் மற்றும் ஆசிரியர். இந்த புகைப்படம், சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டின் போது எடுக்கப்பட்டது என அவரே பிரபல வர இதழ் ஒன்றில் கூறியுள்ளார். அதே போல் இந்த புகைப்படத்தில் அவர் பின்னல் உள்ளது அவருடைய நண்பர் என்றும் அவர் ஒரு ஓய்வு பெற்ற வாங்கி ஊழியர் என்றும் கிரிஷி தெரிவித்துள்ளார் .

இந்த புகைப்படத்தை நெல்லை மாவட்டத்தை சேந்த ஒரு புகைப்பட கலைஞர் எடுத்ததாகவும்,  ஆனால் எப்படி இந்த புகைப்படம், வெளியானது என தனக்கு தெரியவில்லை என்றும்,  தன்னுடைய படத்தை விஜய் சேதுபதியின் புகைப்படம் என எண்ணி, ரசிகர்கள் லைக்குகளை வாரி குவித்துள்ளது, தனக்கே வியப்பாக உள்ளது என கூறியுள்ளார் கிருஷி.