நடிகர் விஜய் சேதுபதி தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு சிபாரிசு செய்து அடுத்த படங்களிலும் நடிக்க வாய்ப்புக் கொடுப்பார். அந்த வகையில் இவருடைய சிபாரிசசை பெற்று, முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. 

இந்நிலையில் இவரின் சிபாரிசால் நடிகை மடோனா சேபஸ்டீன் தற்போது 'ஜிங்கா' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

'பிரேமம்' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான மடோனா, நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி', மற்றும் 'கவண்' ஆகிய படங்களில் நடித்தார். 

தற்போது பட வாய்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு விஜய் சேதுபதி சிபாரிசு செய்து 'ஜிங்கா' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார் மடோனா, இயக்குனர் கோகுல் இயக்கி வரும் இந்த படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. 'வனமகன்' படத்தில் நடித்த நடிகை சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.