இந்நிலையில் படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அதே தேதியில் DTH-யிலும் படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களால் படத்தை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் க/பெ ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கடந்த மாதம் முதலே தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவலை படக்குழு தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ ரணசிங்கம்' அமைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் சப் - டைட்டில் உடன் வெளியாக உள்ளது. க/பெ ரணசிங்கம் ஓடிடி ரிலீஸ் உறுதி செய்யப்பட்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேதி தெரியாமல் இருந்தது. 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

இந்நிலையில் படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அதே தேதியில் DTH-யிலும் படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் 70 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவாராம். மீதி கதை அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும் என்று கூறப்படுகிறது.