Vijaysethupathi Jinga flim official update

தமிழ் சினிமாவின் ப்ராமிஸிங் ஹீரோவாகியிருக்கிறார் விஜய் சேதுமதி. மனுஷனுக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகிறது. கவண், விக்ரம் வேதா என தொடர் வெற்றிகளை தொடர்ந்து இன்று வெளியாகியிருக்கும் ‘கருப்பன்’ படமும் பாஸிடீவ் ரிவியூஸை அள்ளிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கு கமிட் ஆகி வருஷக்கணக்கில் கால்ஷீட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் வி.எஸ். மற்ற பேனர்களுக்கு நடுவில் தனது சொந்த பேனரிலும் ஒரு படத்துக்கு கமிட் ஆகியிருக்கிறார். 

விஜய்சேதுபதியின் கேரியர் கிராஃபை தூக்கி நிறுத்திய படங்களில் ஒன்று ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. வளர்ந்து வரும் எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் அட்டு மற்றும் ஆகாவழியான சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் நடித்து படத்தை மரண ஹிட் அடிக்க வைத்தார். 

‘ஃப்ரெண்டு லவ் மேட்டரு! ஃபீல் ஆயிட்டாப்ல், ஒரு ஆஃப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல

குமுதா ஹேப்பி அண்ணாச்சி!

சூப்பர் ஜி! சூப்பர் ஜி! சூப்பர் ஜி!’ - என்று தமிழ் ரசிகனை தெறிக்கவிட்ட மூவி இது. 

இந்த படத்தின் இயக்குநர் கோகுல் சொன்ன கதை விஜய்சேதுபதிக்கு செமத்தியாக பிடித்துப் போக ‘ஜூங்கா’ என்கிற டைட்டிலுடன் சொந்த பேனரில் தயாரிக்க முடிவெடுத்துவிட்டார். 

அக்டோபரில் யு.கே.வில் துவங்குகிறது இதன் படப்பிடிப்பு. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே கூடாரம் போட்டு ஜூங்காவை உருவாக்கப்போகிறார்கள். 

வனமகன் படத்தின் பட்டர் பேபி ஆயிஷாதான் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ஹீரோயின். அசால்ட் காமெடிக்கு இருக்கவே இருக்கார் யோகி பாபு. 

இந்த ப்ராஜெக்டில் கவனிக்க வேண்டிய ஹைலைட் விஷயமென்னவென்றால்...ஒரு சீன் கூட ஷூட் ஆகாத நிலையில் இந்த படத்தின் தியேட்டர் உரிமையை அருண்பாண்டியனின் ‘ஏ & பி’ நிறுவனம் அதற்குள் வாங்கி, சூடாக ஒப்பந்தமும் போட்டாகிவிட்டது. 

கருப்பனுக்கு தொட்ட இடமெல்லாம் கரன்ஸி மழை கொட்டுகிறது போங்கள்! ரஜினி, அஜித் , விஜய் மார்க்கெட்டையெல்லாம் செம மாஸாக காலி செய்து மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கிறார் மக்கள் செல்வன். 
மகிழ்ந்திரு!