Makkal Selvan Vijaysethupathi : மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரங்கில் இனி அறிமுகமே தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புகழ் இந்திய திரை உலகம் முழுவதும் பரவியுள்ளது. பல முன்னணி நடிகர்களுடைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி, கார்த்திக் சுப்புராஜின் "பீட்சா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஒரு மாபெரும் மாற்றத்தை கண்ட நடிகர் தான் வ\அவர். 

இன்று தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். நாயகனாக மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் என்று பல முன்னணி நடிகர்களுக்கு வலுவான போட்டியாக ஒரு சிறந்த வில்லன் நடிகராகவும் அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு இந்த பொங்கல் ரேசில் கலந்து கொண்டு, வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் "மெரி கிறிஸ்மஸ்". ஸ்ரீராம் ராகவன் என்பவருடைய இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப் மற்றும் ராதிகா ஆப்தே மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் வினய் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். 

தமிழ் மொழியில் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் விநியோகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் முழு வீச்சில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மொழிக்கான பிரமோஷன் பணியில் இன்று சென்னையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். 

அப்பொழுது விஜய் சேதுபதியை நோக்கி பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் தொடர்ச்சியாக பதில் கூறி வந்த நிலையில், "ஹிந்தி தெரியாது போடா" என்கின்ற வசனங்களை நாம் கூறுகிறோம் ஆனால் நீங்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கின்றீர்களே இது நியாயமா? என்று கேள்விகள் கேட்ட பொழுது, சற்று என்று கோபப்பட்ட விஜய் சேதுபதி இது போல பலரிடம் கேட்கின்றீர்கள், யாரும் இந்தியை படியுங்கள் என்று திணிக்கவில்லை. 

இங்கே ஹிந்தி திணிப்பு தான் வேண்டாம் என்று கூறுகின்றனர், ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அப்புறம் இப்போ எதுக்கு இந்த கேள்வி? என்று சற்று கோபமாக பதில் கூறியுள்ளார். தற்பொழுது அவர் பேசிய அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.