'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் சிறந்த இயக்குனராக பதிந்தவர் 'தியாகராஜன் குமாரராஜன்'. தற்போது இவர் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் தன்னுடைய அடுத்த இன்னிஸ்சை துவங்கியுள்ளார். 

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஷில்பா என்கிற பெயரில் திருநங்கையாக நடிக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை சமந்த நடித்து வருகிறார். மேலும் இதே படத்தில் இயக்குனர் மிஷ்கின் பாதிரியாராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டார்க் காமிடியாக எடுக்கப்பட்டு வரும் இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டயன்மென்ட் படமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இந்த திரைப்படம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் 'ராமகிருஷ்ணன், பகத்பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தாக்கது.