கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

31 ஆம் தேதி வரை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், திரையுலகில் அன்றாட பணிகள் செய்து குடும்பத்தை ஓட்டி வரும் ஆயிரனக்கான பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மிகவும் உருக்கமான அறிக்கை வெளியிட்ட பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, கஞ்சி உணவாவது அவர்களுக்கு வழங்க திரையுலகை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது பெப்சி தொழிலாளிகளின் பசியை போக்க, பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே, நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்தின் சார்பாக ரூ.10 லட்சம் அளித்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு உதவிகள் குவிந்தவண்ணம் உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதே போல் நடிகர் பிரகாஷ் ராஜ் 100 மூட்டை அரிசியும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு 150 மூட்டை அரிசியையும் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.