பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களால் படத்தை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். 

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் க/பெ ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது. ஓடிடி-யிலேயே  திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ ரணசிங்கம்' அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் சப் - டைட்டில் உடன் வெளியாக உள்ளது. 

 

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வெறும் 70 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவாராம். மீதி கதை அவருடைய மனைவியான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே நகரும் என்று கூறப்பட்டது. அதை இன்று வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் இரண்டாவது பாடல் உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த படி கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

“புன்னகயே புயலாய் மாறும்” என தொடங்கும் இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுந்தரைய்யர் பாடியுள்ள இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் நிச்சயம் பெண்களை வெகுவாக கவரும். வரிகளை பார்க்கும் போது காணாமல் போன கணவனை தேடி அலையும் அல்லது தேட ஆயத்தமாகும் ஒரு அபலை பெண்ணின் குரல் போல் தெரிகிறது. வைரலாகி வரும் பாடல் இதோ...