vijaysethupathi advertisement salary
சினிமாத் துறை ஒரு மாய உலகம் என்று பலருக்கும் தெரியாது. திரைத்துறையைப் பொறுத்தவரை 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்கிற பழமொழி சரியாகப் பொருந்தும்.
நடிகர் நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும் வரை மட்டும்தான் இங்கு அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். அவர்கள் திரைத்துறையை விட்டு சென்றுவிட்டால் அவர்களை திரையுலகம் மட்டும் அல்ல மக்களும் மறந்து விடுவார்கள் என்பது தான் உண்மை.

ஆனால் இதையும் தாண்டி 'அஜித்' போன்ற பல முன்னணி நடிகர்கள் உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். சமீபத்தில் கூட மாணவி அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவிகளின் படிப்பிற்காக விஜய் சேதுபதி 50 லட்சம் நிதி உதவி வழங்கி அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.
மேலும் தற்போது இவர் 'அணில்' சேமியா நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் 5 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே இவர் பிரபல நிறுவனத்தின் வேஷ்டி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் பாரம்பரியத்தை நாம் என்றும் மறந்து விட கூடாது... ஏற்கெனவே நம் பாரம்பரிய உடையான 'வேஷ்டி' விளம்பரத்திலும் நடித்தேன்.
தற்போது நம் பாரம்பரிய உணவுகளான 'கம்பு', 'கேழ்வரகு' 'தினை', 'வரகு' போன்றவற்றை மக்கள் தங்களுடைய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்திற்கு பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
