வித்தியாசமான கதை தேர்வு, மாறுபட்ட கதாபாத்திரம், முன்னணி ஹீரோ பட்டியலில் இருந்தாலும் அது பற்றி சற்றும் அலட்டி கொள்ளாமல் இருப்பது, தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வரவேற்பு கொடுப்பது என மற்ற நடிகர்களில் இருந்து சற்று வித்தியாசமாகவே இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும், மக்கள் செல்வன் என்கிற பெயருக்கு ஏற்ற போல் இவர் நடந்து கொள்வதாக இவரை பாராட்டாத ரசிகர்களே இல்லை.

இவர் நடிப்பில் மட்டுமின்றி, சமூகத்தின் மீதும் அதிக அக்கறையோடு பல்வேறு செயல்களை செய்து வருகிறார். மேலும் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட விஜய் சேதுபதி இன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆர்த்தி, ஆதித்யா என்ற இரண்டு புலிகளை தத்தெடுத்துள்ளார். இந்த புலிகளுக்கு ஆறு மாதத்திற்கு ஆகும் பராமரிப்பு செலவிற்கான 5 லட்சம் காசோலையை வண்டலூர் பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.

இவரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.