விஜய்சேதுபதி தற்போது 'புரியாத புதிர்', கவண், விக்ரம் வேதா, கருப்பன், 96, போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இதனை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் என்பவர் இயக்கவுள்ள பெயரிடப்படாத புது படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவான பிரபல நடிகர் கார்த்திக் மகனுடன் இணைத்துள்ளார் , இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் படமாக எடுக்கப்படும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் கல்லூரி மாணவனாகவும், விஜய்சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும் நடிக்கவுள்ளனர். 

ஒரு மாணவனுக்கும், பழங்குடி இனத்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இன்று முதல் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் இயக்குனர் ஆறுமுக குமார் கூறியுள்ளார்.