எதிர்பார்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட சங்கர் இயக்கத்தில் 2.O விலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலாவிலும் நடித்துள்ளார்.இதில் காலா ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகிறது. இதற்கு அடுத்தபடியாக இவர் நடிப்பாரா இல்லை முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ்

இந்த நிலையில் ரஜினிகாந்த் பீட்ஸா படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமாகிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாயின.அதோடு இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.படம் இப்போதுதான் உறுதிபடுத்தியுள்ள நிலையில் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி வில்லனா?

இந்நிலையில் தனது  முதல் படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதியை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.விக்ரம் வேதா படத்தில் வித்தியாசமான வில்லனாக விஜய் சேதுபதி கலக்கியிருப்பார். அதனால் இந்த படத்திலும் வில்லன் ரோல் ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வரவில்லை.