Vijay Mersal First show will start in usa on october 17th
மெர்சல் படத்தின் முதல் காட்சி எங்கே திரையிடப்படுகிறது என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மெர்சல். இதில் விஜய்யுடன் இணைந்து நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். 13௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அட்லீ இயக்கியிருக்கிறார்.
'தெறி' படத்தின் வெற்றிக்குப்பின் விஜய்-அட்லீ இருவரும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் காட்சி எங்கே திரையிடப்படுகிறது என்கிற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தின் முதல்காட்சி 17-ம் தேதி மாலை 6 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. திரையரங்குகள் வேலை நிறுத்தம் காரணமாக இப்படம் அக்டோபர் 18-ம் தேதி தமிழகத்தில் வெளியாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
