சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து (Arabic Kuthu) என்கிற பாடல் இன்று வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடி உள்ளனர். 

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் (Anirudh), தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் (Beast) படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார். 

அந்த வகையில் அவர் எழுதிய அரபிக் குத்து (Arabic kuthu) என்கிற பாடல் இன்று வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடி உள்ளனர். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான செல்லம்மா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், அரபிக் குத்து பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அரபிக் குத்து பாடலின் ரிலீஸ் டைம் அடங்கிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியிடப்படும் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள விஜய்யின் (Vijay) வித்தியாசமான லுக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.