முன்னணி நடிகைகளுக்கே 2 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தவிர மற்ற நடிகைகள் ஓவராக சம்பளம் கேட்டால், உடனடியாக அடுத்த நடிகைக்கான தேடுதலையும் துவங்கி விடுகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார்... விஜயசாந்தி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளமாக கேட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பெரிய தொகையாக இருந்த போதிலும், இந்த கதாப்பாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமாக இருப்பர் என இயக்குனர் அணில் ரவிபுடி விரும்பியதால், இந்த தொகையை கொடுக்க தற்போது பேச்சு வார்த்தை நடந்தி வருவதாக கூறப்படுகிறது. 

இதுவரை, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை, நடிகை நயன்தாரா வாங்கி வரும் சம்பளம் மட்டுமே 5 கோடியை தொட்ட  நிலையில், தற்போது ரீஎன்ட்ரி நடிகைக்கு இந்த பெரிய தொகை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.