பிக்பாஸ் வீட்டில் வலிய சென்று சண்டை இழுத்து வந்த போட்டியாளர் மஹத் வெளியே சென்று விட்டாரே இனி சண்டை போடா கூட ஆள் இல்லையே என சில ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். இதனால் புதிதாக இந்த வாரம் சில போட்டியாளர்கள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. 

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து கொஞ்சம் நல்ல புள்ள போல இருந்த விஜயலட்சுமி இன்று போட்ட போடில் இந்த வார தலைவராக உள்ள சென்ராயனே என்ன சொல்வது என தெரியாமல் நிற்கிறார்.

அப்படி என்ன செய்தார் தெரியுமா? தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில்.. தலைவர் பொறுப்பில் இருக்கும் சென்றாயன். விஜயலட்சுமியிடம் வந்து மும்தாஜ் எழுந்து வந்தால் அவர்களுக்கு சாதாரண எண்ணெயில் தோசை சுட்டு தராமல், ஆலீவ் எண்ணெயில் தோசை சுட்டுக் கொடுங்கள் என்கிறார்.

ஆனால் விஜயலட்சுமியோ தலையை அசைத்து அசைத்து, அதை அவர் செய்துகொள்வார், எனக்கும் வேலை இருக்கிறது. அவர் பின்னாலேயே சென்று வேலை செய்ய முடியாது, பக்கத்துலேய இருந்து பார்த்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் பக்கத்திலேயே இருந்து பார்த்து கொள்ளுகள். நான் அவருடைய உதவியாளர் இல்லை போட்டியாளர் என தடாலடியாக கூறுகிறார்.

இவரின் பேச்சை கேட்டு ரசிகர்கள் பலர், விஜயலட்சுமி அட்டகாசம் பண்ணுறீங்க என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜயலட்சுமி வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் மாற்றத்திற்க திருப்பு முனையாக இருப்பார் என கூறப்படுகிறது.