vijayakanth well speech in maduraveeran audio launch

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டி நடித்துள்ள மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கடந்த சில தினங்களாக ஓய்வில் இருந்த கேப்டன் விஜயகாந்த் கலந்துக்கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர்... முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. 

என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து பேசி இருக்கலாம். ஆனால் எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார் அவரிடம் நாங்கள் அனார்ந்து பார்த்து தான் பேசவேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். 

என்னுடைய மனைவி படத்தின் தயாரிப்பாளர் சுப்பு அவர்களை பற்றி நிறைய கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்துக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் கேப்டன் விஜயகாந்த் மிகவும் தெளிவாக பேசியிருந்தார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பட தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சமுத்திரகனி, எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , நடிகர் மைம் கோபி , தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன் , நடிகர் மாரிமுத்து , நடிகர் தம்பிராமையா , நாயகி மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.