பிரபல நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகனுமான சண்முக பாண்டியனை, அவருடைய நண்பரும், நடிகர் பார்த்திபனின் மகனுமான ராக்கி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க போராடிக் கொண்டிருப்பவர், கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு, 'சகாப்தம்' திரைப்படம் வெளியானது.

கலவையான விமர்சனங்களை,  இந்தப்படம் பெற்றாலும் இது சண்முகப்பாண்டியனுக்கு திறமையை வெளிப்படுத்தும் படமாக அமையவில்லை.  இதைத் தொடர்ந்து வெளியான 'மதுரவீரன்' திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடம், சிறந்த நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று தந்தது. இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக வாழ்ந்து நடித்திருந்தார் சண்முக பாண்டியன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இவர் அவருடைய தந்தை விஜயகாந்த் உடன் இணைந்து 'தமிழன் என்று சொல்' என்கிற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து சண்முக பாண்டியன் புதிதாக கமிட்டாகி நடித்து வரும் திரைப்படம் 'மித்ரன்' இந்த படத்தில் தன்னுடைய அப்பா பாணியிலேயே முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்காக தன்னுடைய உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றினார்.  இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக சென்ற போதிலும், வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செம்ம ஸ்லிம்மாக மாறியது மட்டும் இன்றி, ஸ்டைலிஷ் லூக்கிலும் இருக்கிறார் சண்முக பாண்டியன்.

இவரை, இவருடைய நண்பரும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபனின் மகன் ராக்கி விதவிதமாக எடுத்த புகைப்படங்களை சண்முக பாண்டியன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, லைக்குகள் குவிந்து வருகிறது.