நடிகை சாக்ஷி சிவானந் தமிழில், மாப்பிள்ளை கவுண்டர், புதையல், வாஞ்சிநாதன் உள்ள பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும், நடிகர் மகேஷ் பாபு சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் இவர், இவருடைய பேஸ் புக் பக்கத்தில், தன்னையும் தன்னுடைய அம்மாவையும், தன்னுடைய சகோதரியின் மாமியார், பாவனா  கொலை செய்ய முயற்சி செய்வதாக கூறி பரபரப்பு பதிவு ஒன்றை பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்சூரன்ஸ் பணம் குறித்த பிரச்சனையின் காரணமாக, தனது அக்காவின் மாமியார் பாவனா, முதலில் தங்களை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும். பின் அவர் அமெரிக்கா சென்று விட்டார். இது குறித்து பலமுறை தன்னுடைய தாயை மும்பை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். எனவே மீண்டும் அவர் எப்போது இந்தியா வந்தாலும் இந்த கொலை முயற்சி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என தன்னுடைய முகநூல் பக்கத்தில், சாக்ஷி பதிவிட்டுள்ளார்.  

இவர் திடீர் என இப்படி ஒரு கொலை முயற்சி பற்றிய செய்தியை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.