விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷமிதா ஷெட்டியிடம், நடுரோட்டில் தவறாக நடக்க முயன்றவர்களிடம் இருந்து அவரை  பொதுமக்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்',  மாதவன் நடித்த 'நான் அவள் அது' மற்றும் ஒருசில தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷமிதா ஷெட்டி. இவர் தற்போது 'தி டெனட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷமிதா ஷெட்டி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், 'கடந்த திங்கள் கிழமை அன்று மும்பை அருகேயுள்ள 'தானே' பகுதியில் இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது,  பைக்கில் வந்த மூவர் காரின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு, இதனை தட்டிக்கேட்ட தனது டிரைவரை தாக்கியது மட்டுமின்றி நடு ரோட்டில் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். 

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தான் தன்னை காப்பாற்றியதாகவும், அவர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது, மூவரும் தப்பி சென்றுவிட்டதாகவும் ஷமிதா ஷெட்டி தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஷமிதா ஷெட்டியும் அவருடைய டிரைவரும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மும்பை போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் இவர்களை தாக்க முயன்ற மூன்று நபர்களையும் போலீசார் கண்டு பிடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.