அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் மெர்சல். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல பிரபல கட்சியால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த பின் வெளியாகி, தற்போது வரை பல சாதனைகளை செய்து வருகிறது. 

இந்த திரைப்படத்தில் ரசிகர்களே எதிர்ப்பார்க்காத வண்ணமாக விஜய் மூன்று மாஸான வேடங்களில் நடித்திருந்தார். டாக்டர், மேஜிக் மேன் என தான் ஏற்றுக்கொண்டு நடித்த வேடங்களுக்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு இவர் நடித்திருந்தால் என்னவோ தொடர்ந்து இந்த திரைப்படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது.

ஏற்கனவே, இந்த படத்தின் டீசர், டிரைலர், பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், தற்போது  சர்வதேச அளவில் நடக்கும், IARA விருதுகள் வழங்கும்  போட்டியில் , சிறந்த நடிகருக்கான பிரிவில், மெர்சல் திரைப்படத்திற்காக விஜயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சிறந்த நடிகருக்கான இந்த விரிவில், சர்வதேச அளவிலான நடிகர்கள் பலரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.  டேனியல் கலுயா(கெட் அவுட்), டேவிட் டென்னன்ட்(டான் ஜுவான் இன் சோஹோ), ஜான் பொயேகா(ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி), ஜாக் மோரிஸ் (ஈன்ஸ்ட்என்டர்ஸ்), ஜேமி லோமாஸ் (ஹோலிஓக்ஸ் கிறிஸ் அட்டோ(ஸ்விங்), ஜாக் பெர்ரி ஜோன்ஸ்(பாங்), என பல சர்வதேச நடிகர்களின் பெயரும் இந்த பிரிவில் இருந்தது. அதில் மெர்சல் திரைப்படத்திற்காக விஜயின் பெயர் தான் , சிறந்த நடிகருக்கான விருதினை வென்றிருக்கிறது. 

இதனால் விஜய் ரசிகர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இந்த நல்ல செய்தியை கொண்டாடி வருகின்றனர். அதே போல் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தளபதி விஜய்க்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில், நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த், விஜய் சிறுவதில் இருக்கும் போது அவருடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படத்தை வெளியிட்டு... "சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".  என தன்னுடைய முகநூல் பக்கத்தின்  மூலம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவிக் சிறந்த நடிகருக்கான விருது ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் என விஜயை அனைவரும் புகழ்ந்து வருகிறார்கள்.