Asianet News TamilAsianet News Tamil

ஏற்கனவே உடல்நிலைப் பிரச்சினை...இப்ப இப்படி ஒரு புது சிக்கலா விஜயகாந்துக்கு?...

 விஜயகாந்தின் உடல்நிலை ஓரளவு மட்டுமே தேறியுள்ள நிலையில் அவரது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வங்கி ஒன்றின் மூலமாக ஏலத்திற்கு வந்திருப்பது கேப்டன் உட்பட அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

vijayakanth health condition
Author
Chennai, First Published Jun 21, 2019, 12:01 PM IST

 விஜயகாந்தின் உடல்நிலை ஓரளவு மட்டுமே தேறியுள்ள நிலையில் அவரது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வங்கி ஒன்றின் மூலமாக ஏலத்திற்கு வந்திருப்பது கேப்டன் உட்பட அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.vijayakanth health condition

தேர்தல் சமயத்தில் மிகவும் உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த், சமீபகாலமாக முழு ஓய்வில் இருந்தார். வெளி ஆட்களை அவ்வளவு சந்திக்காலம் இருந்த அவர் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பாக்யராஜ் அணியினரை மட்டும் சந்தித்தார். அப்போது வந்திருந்த பாக்யராஜ் உள்ளிட்ட பலரை அடையாளம் கண்டுகொண்ட விஜயகாந்த், ஒரு சில பத்திரிகையாளர்களின் பெயரை உச்சரித்து அவர்களைத் தேடியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் ரூ.100 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில்,  

5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார் விஜயகாந்த். இந்தத் தொகை ஸ்ரீஆண்டாள் அழகர் எஜுகேசனல் டிரஸ்ட் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு ஜாமீன்தாரர்களாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர்  கையெழுத்திட்டுள்ளனர். vijayakanth health condition

இந்நிலையில் மாமண்டூரில் கல்லூரி அமைந்துள்ள 25 ஏக்கர் நிலத்தை 92 கோடியே 5 லட்சத்து 5 ஆயிரத்து 51 ரூபாய்க்கும்,  சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள 4651 சதுரஅடி மற்றும் 10271 சதுர அடி வணிக வளாகத்தை 4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 849 ரூபாய்க்கும் ஏலத்தில் விட குறைந்த பட்ச கேட்பு விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விஜயகாந்த் குடியிருக்கும் சாலிகிராமம் கண்ணபிரான் காலனியில் அமைந்துள்ள 3013 சதுர அடி வீட்டை 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் ஏலம் விடுவதாகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை மவுண்ட் ரோடு கிளை அறிவித்துள்ளது. விஜயகாந்தின் 100 கோடிக்கும் அதிகமான மதிப்புக்கொண்ட வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்துக்கு வரும் அறிவிப்பு தேமுதிகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios