Vijay ajith producers are struggling for budget

கரும்பு மெஷினில் கையைக் கொடுத்தவர்கள் போல அவசரப்பட்டு காலை விட்டுட்டோமே என்று தவியாய் தவிக்கிறார்களாம் தல, தளபதி படங்களின் தயாரிப்பாளர்கள். 

தல படம் 60 கோடி பட்ஜெட் என்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் இப்போதே 90 ஐத் தொட்டு விட்டதாம். இன்னும் ஒரு ஷெட்யூலும் போஸ்ட் புரடக்‌ஷனும் மிச்சம் இருக்கிறது. முழுக்க முழுக்க வெளிநாடு என்பதால் பட்ஜெட் இப்படி ஏறிவிட்டது. தயாரிப்பாளர் ஸ்பாட்டிலேயே இருந்தும் கூட செலவை கட்டுப்படுத்த முடியவில்லையாம். 

இதேபோல் முதன்முறையாக அகலக்கால் வைத்த கடவுள் நிறுவனமும் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. 50 என்று சொல்லி 80 ஐத் தொட்டு விட்டாராம் இயக்குநர். தல இயக்குநராவது காரணத்தோடு செலவு செய்பவர்.

இவர் அப்படி இல்லை. இஷ்டத்துக்கு செலவு செய்கிறாராம். அன்றைய ஷூட்டுக்கு தேவையே இல்லாத உபகரணங்களை எல்லாம் வரவழைத்து சும்மா நிறுத்தி வைத்துக்கொள்கிறாராம். ஸ்பாட்டிலிருந்து வரும் தகவல்கள் டரியலைத் தந்திருக்கிறது தயாரிப்புக்கு. 

பட்ஜெட்டே நூறு கோடியைத் தாண்டினால் எப்படி திரும்ப எடுப்பது என்று புரியாமல் தவிக்கின்றனர் இரண்டு தயாரிப்பாளர்களும்...