தமிழ் திரையுலகில் தற்போது மிகச் சிறந்த நடிகராக கருதப்படுபவர்  விஜய் சேதபதி. அவரது படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.ஒவ்வோரு படத்திலும் ஏபவழ ஒரு மெசேஜ் சொல்லியுருப்பார்.

எந்தவொரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது திறமை மூலம் கோலிவுட் திரையுலகில் தனக்கென இடம்பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமன்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். 

படத்துக்கு படம் வித்தியாசம். வித விதமான கெட்டப்புகள், அடுத்தடுத்த படங்கள் என விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். இது போக சின்னத்திரையிலும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியே நேற்று ட்ரெண்டாகி இருந்தார். 

இந்நிலையில் விஜய் சேதுபதி  புதிதாக பிஎம்டபிள்யூ (BMW) பைக் ஒன்றை வாங்கியுள்ளார், அதன் மேல் அமர்ந்து அவர் ஓட்டும் பிகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது  சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.