ஒரு காலத்தில் உணர்வுப்பூர்வ இயக்குநர் என போற்றப்பட்ட இயக்குநர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியை ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குநராக பல ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சேரன் நடிக்க வந்த பிறகு தடுமாறத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகளே இல்லாமல் முடங்கிப்போனார் சேரன். கடந்த சில மாதங்களுக்கு முன் விஜயசேதுபதி நடிக்கும் படத்தை சேரன் இயக்குவதாக முடிவானது. அதன் பிறகே சேரன் சி2எச் சம்பந்தமாக தர வேண்டிய கடன் பற்றிய தொல்லைகளால் அழுத்தம் கொடுத்து வந்தவர்கள் அமைதி காத்திருக்கிறார்கள். காரணம் விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போவதால் எப்படியும் பணம் வந்து விடும் என்கிற நம்பிக்கையால் அவர்கள் கொடுத்த அழுத்தத்தை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இதை ஒரு மேடையில் வெளிப்படையாகவே கூறி, விஜய் சேதுபதிக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார் சேரன். அவரை தேடிப்போய் கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதிக்கு நிறைய பாராட்டுகள். நிஜத்தில் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குனர் அமீர்தான். அவர்தான் விஜய்சேதுபதியிடம் ‘சேரன் நல்ல டைரக்டர். இப்படி முடங்கிப் போய் கிடப்பது தமிழ்சினிமாவுக்கு நல்லதல்ல. அதனால் உங்களை மாதிரி நல்ல நடிகர்கள் கால்ஷீட் கொடுக்கணும்’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகே விஜய்சேதுபதி சேரனை போய் சந்தித்து இருக்கிறார்.