கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரனும் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விதமாக இவர் பாடியுள்ள இண்டிபென்டென்ட் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ’சகாப்தம்’ மற்றும் ’மதுரைவீரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து, கோலிவுட் திரையுலகில் நடிகராக தனக்கான அடையாளத்தை பதித்து விட்டார். தற்போது உடல் எடையை குறைத்து ’மித்திரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன்  பிசினஸ், ஸ்போட்ஸ் மற்றும் அப்பாவின் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அவர் சினிமாவிற்குள் நுழைய அஸ்தீவாராம் போட்டுள்ளார். விஜய பிரபாகரன் பாடிய இண்டிபென்டென்ட்  பாடலின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவகிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


"தமிழரை என்னுயிர் என்பேன் நான்..." தமிழ்இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிற வார்த்தைகளுடன், விஜய பிரபாகரன் செம்ம மாஸாக ஹீரோ போல் தம்ஸ்அப் காட்டியபடி நிற்கும் போஸ்டர் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.