தெலுங்கு சினிமாவின் சாக்லேட் பாய் விஜய் தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’நாளை மறுநாள் தமிழ்,தெலுங்கு,கன்னட ,மலையாள மொழிகளில் ரிலீஸாக உள்ள நிலையில் மிக பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்ட அவரது ‘ஹீரோ’படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்ட படம் விஜய தேவரகொண்டாவின் ‘ஹீரோ’. இதே தலைப்பில் சிவகார்த்திகேயனும் ஒரு படம் துவங்கியிருந்ததால் தலைப்பு யாருக்கு என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ‘ஹீரோ’படத்தை டிராப் பண்ண முடிவெடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருக்கிறது.

இதுவரை 20 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் எடுத்த வரை படத்தை எடிட் பண்ணிப்பார்த்த வகையில் பயங்கர அப் செட் ஆன தயாரிப்பில் இனி தொடர்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்துவிட்டார்களாம். படத்துக்கு இதுவரை 15 கோடி வரை செலவானது குறித்து எந்தக் கவலையும் தயாரிப்பாளர்களுக்கு இல்லையாம். இப்படத்தில் ஷாலினி பாண்டே, மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக கமிட் பண்ணப்பட்டிருந்தார்கள்.