திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின்... தளபதி விஜய் கையில் செங்கோல் கொடுத்து தலைமை ஏற்கவா என அழைப்பது போல ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின்... தளபதி விஜய் கையில் செங்கோல் கொடுத்து தலைமை ஏற்கவா என அழைப்பது போல ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் முன்னணி பிரபலங்கள்... புகைப்பட தொகுப்பு..!
தளபதி விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக அரசால் புரசலாக தகவல்கள் வெளிவந்தாலும், இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அறிக்கை விட்டு தெளிவு படுத்தினார் விஜய். இந்நிலையில் தளபதிக்கு வரும் ஜூன் 22 ஆம் தேதி பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டங்களை இப்போதே துவங்கி விட்டனர் தளபதி ரசிகர்கள். ஏற்கனவே, தளபதிக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை எடுத்து கூறும் விதமாக வெளியான காமன் டிபி ஒன்று ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவர் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து பல ரசிகர்கள் விதவிதமான பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். அதே போல் விதவிதமாக போஸ்டர் அடித்து இப்போதே ஓட்ட துவங்கி விட்டனர். அந்த வகையில் தபோது சென்னை, மதுரை உள்பட பல நகரங்களில் விஜய் பிறந்தநாள் குறித்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் நகரில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வித்தியாசமான போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகள்: வாவ்.... மஹத்தின் மகனுக்கு இவ்வளவு அருமையான பெயரா? குவியும் வாழ்த்து..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுடன் விஜய் இருப்பது போலவும், ஸ்டாலின் செங்கோல் கொடுத்து, ’ஏழை எளியவர்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா! தலைமை ஏற்க வா! என அழைப்பு விடுப்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் போஸ்டர்களில் வசனங்களை தெறிக்க விடும் ரசிகர்கள் இந்த முறையும்.... சற்றும் குறைவைக்காமல் தங்களுடைய செயலை செய்ய துவங்கி உள்ளனர். இந்த போஸ்டர் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
