Vijay will hit 48 feet if Kamal crosses eight feet Is our Kasturya saying this?
கமல்ஹாசன் எட்டு அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் என்று நடிகை கஸ்தூரி டிவீட் செய்துள்ளார்.
நடிகையாக இருந்து தற்போது தொலைக்காட்சி விவாத மேடைகளில் பங்கேற்றவர் நடிகை கஸ்தூரி.
ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற அறிவிப்பு வந்தபோதும் சரி, கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்றபோதும் போதும் சரி உடனே டிவீட் செய்து வரவேற்றார்.
பின்னர் சென்னை வந்து கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தபோதும், ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். கமல்ஹாசனிடம் இருந்து விரைவில் பெரிய அறிவிப்பு வரும்’ என்று தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வந்தபோதும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கஸ்தூரி பேசினார். கமலையும் ஒருமுறை சந்தித்து பேசினார் கஸ்தூரி.
இந்த நிலையில் திடீரென ‘’கமல்ஹாசன் எட்டடி பாய்ந்தால், விஜய் நாற்பத்து எட்டடி பாய்வார்’’ என்று கஸ்தூரி டிவிட் செய்துள்ளார். இதனால், இவரது ஃபாலோவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், அவருடைய ஆதரவு யாருக்கு? என்று குழம்பி போயிருக்கிறார்கள்.
