தனது மகன் விஜய் பிகில் படத்தில் காவி வேஷ்டி கட்டியது குறித்து கேள்வி கேட்டதால் பெருங்கோபமடைந்து உள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். 

தேர்தல் முடிவுகளுக்கு முன் கருத்துக் கணிப்புகளை வைத்து கருத்துக் கூறிய அவர், ’’பாஜக ஜெயித்தால் நாட்டில் எல்லோரும் காவி வேட்டி தான் கட்டிக்கொண்டு அலைய வேண்டும்’ என்று கூறி இருந்தார். பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனால், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் காவி வேஷ்டிகளை கூரியரில் பார்சல் அனுப்பி பதற வைத்தனர். 

இந்நிலையில், விஜய் நடித்து வரும் பிகில் பட போஸ்டர் வெளியானது. அதில், விஜய் விஜய் காவி வேட்டி கட்டியிருந்தார். இதுகுறித்து, விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''என்னிடம் என் படத்தை பற்றி கேளுங்கள். விஜய்யை பற்றி கேட்காதீர்கள். நான் சொன்னது என்னுடைய கருத்து மட்டுமே. அவர் வேட்டி கட்டியிருந்தால் அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள்'' எனக் கோபமானார். 

இவரது திடீர் கோபம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. விஜய்யை பற்றி எப்போதும் பெருமையாகவும், உயர்வாகவும் மட்டுமே பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர் காவி வேஷ்டி பற்றி கேட்டதும் கோபப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் ஒரு புதிய படம் ஒன்றை துவக்கியுள்ளார் இப்படத்திற்கு கேப்மாரி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.