தனது ஒவ்வொரு படங்களின் ஷூட்டிங் முடிந்ததும் ஹாயாக, செம்ம ஜாலியாக ஏதாவது ஒரு வெளிநாடுக்கு கிளம்புவது விஜய்யின் ஸ்டைல். பிகில் ஷூட்டிங் கோலாலமாய் முடிந்து, பூசணிக்காய் உடைத்து, ஆடியோ லாஞ்சிங்கும் நடந்துவிட்ட நிலையில் ஒரு பரபர செய்தி கசிந்திருக்கிறது. 

அதாவது ஷூட்டிங் கடைசி ஷெட்யூலின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ஆடியோ லாஞ்சிங் நிகழ்வை முடித்துவிட்டு இந்த முறை எந்த நாட்டுக்கு போகலாமென்று யோசித்தாராம் தளபதி. அப்போது தனது மாமனார் தேசமான லண்டனுக்கே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ஆக ஆடியோ லாஞ்ச் முடிஞ்சதும் லண்டனுக்கு ஃபிளைட் ஏறிவிடுவது என்று பரபர பணிகளில் இறங்கியிருக்கிறார். ஷுட்டிங் முடிந்துவிட்டது எனும் மூடுக்கே விஜய் வந்துவிட்டாராம். ஆனால் அந்த நேரத்தில் பதறித் தெறிக்க ஓடி வந்த அட்லீ ‘அண்ணா இன்னமும் உங்களோட இண்ட்ரோ சீனை ஷூட் பண்ணவே இல்லையே. ப்ளீஸ் முடிச்சுக் கொடுத்துட்டு கிளம்புங்க.’ என்றாராம். 

விஜய்க்கு செம்ம டென்ஷன், இருந்தாலும் நல்ல வேளையாக கிளம்ப ரெடியாகும் முன் சொன்ன வகையில் சந்தோஷப்பட்டவர், ‘டேக் ரெடி பண்ணுடா தம்பி’ என்றிருக்கிறார். அண்ணனின் முகம் மாறியதில் அட்லீக்கே கிலி அடித்துவிட்டது. ‘தளபதி படத்தில் இண்ட்ரோ தாறுமாறா இருக்கணும். இவரு இருக்கிற மூட் பார்த்தால் சரியா வருமான்னு தெரியலையே!’ என்றாராம். ஆனால் மேக் அப் போட்டு, ஸ்பாட்டில் பொசிஷனில் வந்து நின்று தன் இண்ட்ரோவுக்கான ஆக்‌ஷனை விஜய் காட்ட, வழக்கம்போல் செம்ம மெர்சலாக வந்திருக்கிறதாம். தியேட்டர் தெறிக்கப்போகுதுண்ணா! என்று விஜய்யை குஷியாக்கி இருக்கிறார் அட்லீ. 
தளபதி வீ ஆர் வெயிட்டிங்!