மகனின் முதல் பிறந்தநாள்.. பிரபலங்களுடன் கொண்டாடிய "தில்" ராஜு - அவரோட வயசு என்ன தெரியுமா?
கடந்த 2003ம் ஆண்டு பிரபல நடிகர் நித்தின் நடிப்பில் வெளியான "தில்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.
டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, Fight வேணுமா Fight இருக்கு, இந்த படத்தில் எல்லாமே இருக்கு. விஜயின் வாரிசு பட விழாவில் தில் ராஜு பேசிய இந்த சொற்பொழிவை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சமீபகாலங்களில் அதிக அளவில் மீம் போடப்பட்ட கன்டண்ட்களில் இதுவும் ஒன்று என்றால் அது நிச்சயம் மிகையல்ல.
தெலுங்கு திரைத்துறையில் மிக மிகப் பிரபலமான தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு பிரபல நடிகர் நித்தின் நடிப்பில் வெளியான "தில்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். 2017ம் ஆண்டு இவருடைய தயாரிப்பில் வெளியான ஒரு படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக வாரிசு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ராம்சரண் நடிப்பில் பிரபல தமிழ் இயக்குனர் சங்கர் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகி வரும் "கேம் சேஞ்சர்" திரைப்படத்தையும் தயாரித்து வழங்க உள்ளார் தில் ராஜு.
இதையும் படியுங்கள் : புதிய வரலாறு படைத்த எதிர்நீச்சல் சீரியல்
இவருக்கு ஏற்கனவே அனிதா என்ற பெண்மணியுடன் திருமணமாகி, அவருக்கு ஹர்ஷிதா என்ற ஒரு மகளும், மகள் வழி பேரக்குழந்தையும் இருக்கும் நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அனிதா காலமானார். அதன் பிறகு தன் தந்தையின் தனிமையை எண்ணி அவருடைய மகள் கடந்த 2020ம் ஆண்டு வைக்கியா என்ற பெண்ணை தில் ராஜுவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அந்த குழந்தைக்கு அன்வி ரெட்டி என்று பெயரிட்டனர். இந்நிலையில் தனது 53வது வயதில் தனது இரண்டாவது மனைவியுடன் பிறந்த குழந்தையினுடைய முதல் பிறந்த நாளை தில் ராஜு இன்று கொண்டாடினார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு, சிரஞ்சீவி உட்பட பல முன்னணி நடிகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : மிஷின் கண்ணோடு ஒன்றை ஆளாக மிரட்டும் தனுஷ்!