பிரபல சீரியல் நடிகர் மானஸ், 10 வருடங்களாக காதலித்து வந்த நீரஜா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

'மனதில் உறுதி வேண்டும்' என்கிற சின்னத்திரை சீரியல் மூலம் அறிமுகமானவர், நடிகர் மானஸ் சவாளி, இந்த சீரியலை தொடர்ந்து, ராதிகா நடித்த 'வாணி ராணி' சீரியலில் அவருடைய மகனாக நடித்தார். மேலும் மாப்பிள்ளை, தேவதையை கண்டேன், அரண்மனை கிளி உள்ளிட்ட சீரியல்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 10 வருடங்களாகவே, அவருடைய தோழி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஒரு சில காரணங்களால் தாமதமாகிக்கொண்டிருந்த இவர்களுடைய திருமணம் தற்போது, பெற்றோர் சம்மதத்துடன், மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள பிரபல திருமணம் மண்டபத்தில் நடந்துள்ளது. 

இதில், பல சீரியல் நட்சத்திரங்கள்  நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.