'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை  பிரியா மஞ்சுநாதன். சீரியலை தொடந்து  டான்ஸ் மற்றும் தொகுப்பாளர் என தன்னை தானா மெருகேற்றிக்  கொண்டு கலக்கியவர்.

இவர் கடந்த ஆண்டு, தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில்,  இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரியா மஞ்சுநாத், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை பிரியாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.