தளபதி விஜய் தற்போது, இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 63 ஆவது படத்தில்,  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குட்டி பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ஒரு பாடல் ஒன்றையும் அவர் பாடி உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பூவையார் பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியில், விஜய் தன்னிடம் பேசியது பற்றியும் தன்னைப் புகழ்ந்த வார்த்தைகள் பற்றியும் பூவையார் கூறியுள்ளார்.  அதாவது... பூவையாரை  பார்த்து,  'நீ ரொம்ப நல்லா பாடுற... அதைவிட சூப்பரா கலாய்க்கிற என்றும் இப்படியே போனால் நல்ல இடத்திற்கு வருவாய் என்றும் புகழ்ந்துள்ளார்.

மிகவும் கஷ்டமான குடும்பத்தில் இருந்து வந்து, தன்னுடைய பாடும் திறமையால் பலரது மனதை தன்னுடைய கானா பாடம் மூலம் கொள்ளையடித்துள்ள பூவையாருக்கு முதல் படமே விஜயுடன் என்பதால் தொடர்ந்து, பாடுவதை தாண்டி திரைப்படங்களில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.