திருமணத்தின் போது செம்ம ஸ்லிம்மாக இருக்கும் அறந்தாங்கி நிஷா..! வைரலாகும் வீடியோ..!
பட்டி மன்றத்தின் மூலம் தன்னுடைய பேச்சு திறமையை வெளிக்கொண்டு வர துவங்கி, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒன்றை பெண்ணாக நின்று, காமெடி களத்தில் இறங்கி அடித்தவர் அறந்தாங்கி நிஷா. திறமை இருந்தால் போதும், அழகு ஒரு பொருட்டே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து, பலருக்கு எடுத்து காட்டாக இருந்து வருகிறார்.

இவர் காமெடி திறமையை நிரூபிக்க, கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை வாயிக்கு வந்த படி பேசினாலும், அவர்கள் அனைவரும் அறந்தாங்கி நிஷாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவது தான் இவருடைய மிகப்பெரிய வெற்றி.
அதே நேரத்தில், வளர்ந்து வரும் நேரத்தில் குழந்தை பெற்று கொண்டால் தன்னுடைய கேரியர் பாதித்துவிடும் என என்னும் பலருக்கு இவர் சிறந்த உதாரணம். இவர் கர்ப்பமாக இருக்கும் போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை தன்னுடைய சவாலாகவே ஏற்று, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி, அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
இந்நிலையில் நிஷா, இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் இவருக்கு, பிக்பாஸ் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகள், மற்றும் நிஷாவின் தாய் பாசத்தை அறிந்து, அவருடைய குழந்தையை அகம் டிவி வழியே காட்டி... பார்க்கும் ரசிகர்கள் அனைவர் நெஞ்சங்களையும் உருக்கும் விதத்தில் இந்த வீடியோ இருந்தது.
இது ஒரு புறம் இருக்க தற்போது நிஷாவின் திருமண வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் நிஷா மிகவும் ஒல்லியாக இருக்கிறார். நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்...