vijay tv makapa anand panjumittai movie

இயக்குனர் அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி. மோகன் தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். 

இதில் கதாநாயகனாக விஜய் டிவி ம.கா.பா ஆனந்த், மட்டும் நாயகியாக நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

எஸ்.பி.மோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நான்கு தேர்ந்த எழுத்தாளர்கள் திரைக்கதையும், இரண்டு வசனகர்த்தாக்கள் வசனங்களையும் எழுதியுள்ளனர். 

முன்னதாக கிருஷ்ணாவுடன் இணைந்து ‘வானவராயன், வல்லவராயன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மா.கா.பா ஆனந்த் தற்போது, வித்தியாசமான கதையம்சம் கொண்ட பஞ்சுமிட்டாய் பதில் நடித்துள்ளார்.
இப்படம் எல்லா விதமான உணர்ச்சிகளும் கலந்து சுவாரசியமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது என்றும், அனைவரையும் கவரும் ஜனரஞ்சகமான திரைப்படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருமணமான ஒரு ஜோடியின் முதல் வாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளிவரவிருக்கும் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்றும் இப்படம் அனைவராலும் விரும்பத்தகும் அளவுக்கு ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் தெரிவித்துள்ளார்.