vijay tv kalakka povathu yaaru fame naveen said her wife

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நவீன். இவருக்கும் மலேசியாவை சேர்ந்த, கிருஷ்ணகுமாரி என்கிற பெண்ணும் நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது.

இந்நிலையில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து, தன்னுடைய கணவர் நவீன் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அவரது முதல் மனைவி திவ்யா போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தி. நவீனை கைது செய்ததாக தகவல் பரவியது.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'தான் கைதாகவில்லை என்றும், திவ்யாவுடன் பழகியது உண்மைதான். அவர் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார் என கூறியுள்ளார் நவீன்'.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதும் தன்னிடமிருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் தான் அவரை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார்.

அவரின் உண்மை முகம் பற்றிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும். விரைவில் அதை வெளியிடுவேன் என்றும் பகீர் தகவலை கூறியுள்ளார்.