vijay tv have 3 crore fans

விஜய் தொலைக்காட்சி­யில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை 3 கோடி பேர் அவர்கள் பார்த்துள்ளதால் குஷியாகியுள்ளனர் நிறுவனத்தினர்.

விஜய் தமிழ் தொலைக்காட்சி 15 பிரபலங்களை வைத்துப் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. 100 நாட்கள் தனி இடத்தில் வெளியுலக தொடர்பு இன்றி இருக்கும் பிரபலங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம் எடுத்து நாள் தோரும் நடக்கும் சண்டை சச்சரவுகள், விளையாட்டு, ஒருவருக்கொருவர் போட்டுக்கொடுப்பது என்று பலதரப்பட்ட சம்பவங்களை படம் பிடித்து வெளியிட்டு வருகிறது.

 தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கென தனியாக நட்சத்திர ஓட்டல் போன்ற செட் அமைத்து அதில் மூலை முடுக்கெல்லாம் கேமராவை வைத்து ஒவ்வொறு நட்சத்திரங்களும் என்ன செய்கின்றனர் என்று பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

தினமும் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் தற்போது 11வது நாள் நடைபெற்று வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளிலேயே இது போன்ற நிகழ்ச்சி முதன் முறையாக ஒளிபரப்ப படுகிறது. வட நாட்டு தொலைக்காட்சியில் இதேபோன்ற நிகழ்ச்சி ஏற்கனவே ஒளிபரப்ப பட்டுள்ளது.

அடுத்தவர் வீட்டில் நடப்பதை எட்டிப்பார்க்கும் மனப்ப்பான்மை காரணமாக ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். இதனால் இரவு 9 மணி நிகழ்ச்சியில் பொதுமக்கள் விஜய் டிவியை மட்டுமே பார்ப்பதால் மற்ற சானல்கள் அந்த நேரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

தங்கள் நிகழ்ச்சியை இதுவரை 3 கோடி பேர் பார்த்துள்ளதாக விஜய் தொலைக்காட்சி பெருமையுடன் கொக்கரித்துள்ளது.