விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌன ராகம். மாதம் தொடர் பெங்காலி சீரியலை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்ட தொடர். இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த தொடரில் தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார்.

 

இதையும் படிங்க: நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

கடந்த 3 வருடத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சக்தி என்ற 7 வயது சிறுமியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்துடன் மெளனராகம் சீரியல் நிறைவடைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

இதுகுறித்து விஜய் டி.வி.நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில், வணக்கம் நான் தான் உங்க மெளனராகம் சக்தி, தொடர்ந்து 3 வருடமாக எங்களுடைய சீரியலுக்கு நீங்க ஆதரவு தர்றீங்க. இப்போ கிளைமேக்ஸ் வாரத்திற்கும் உங்களுடைய ஆதரவு வேண்டும். மறக்காமல் பாருங்கள் கூடிய சீக்கிரம் மெளன ராகம் பார்ட் 2 வரப்போகுது மறக்காமல் பாருங்க என இன்ப அதிர்ச்சியுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. இதனால் சீரியல் முடியப்போகிறதே என்ற வருத்தத்தில் இருந்த இல்லத்தரசிகள், இரண்டாவது பாகம் வரப்போற குஷியில் உள்ளனர்.