80களில் முன்னணி நடிகையாக இருந்த, பிரகதி இந்தி பாடல் ஒன்றுக்கு மாடர்ன் உடையில் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: 'பிகில்' படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இந்த இளம் நடிகரா? 10 மாதத்திற்கு பின் புகைப்படத்தோடு வெளியான ரகசியம்!
 

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், 1994- ஆம் ஆண்டு வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும்,  பின்பு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர், பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது 'அரண்மனை கிளி' சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக, மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: நிச்சயதார்த்த புடவையில்... விதவிதமான போட்டோ ஷூட் நடத்திய 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை! கொள்ளை அழகு...
 

சமீபத்தில், இவர் தன்னுடைய மகனுடன் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்'  பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். 44 வயதில் இவர் போட்ட  நச் ஆட்டம் பார்பவர்களையே அசர வைத்தது. பார்ப்பதற்கு சீனியர் நடிகை என்றே தெரியாதது போல் சரியான உடல் எடையோடு பிட்டாக வைத்துள்ளார்.

அவ்வப்போது, இளம் நடிகைகளுக்கே... செம்ம டஃப் கொடுப்பது போல், டான்ஸ் ஆடி, ரசிகர்களை வியக்க வைத்து வரும் பிரகதி, தற்போது இந்தி பாடல் ஒன்றுக்கு, ஸ்லீவ் லேஸ் உடை அணிந்து, உடல் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.