Vijay to play a baddie in A.R.Murugadoss Mageshbabu film

ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணி என்றாலே விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான் காரணம் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த துப்பாக்கி, கத்தி என இந்த இரட்டை வெற்றி தான் முக்கிய காரணம். அதேபோல சமீபத்தில் முருகதாஸ், மகேஷ்பாபு காம்பினேஷனில் வெளியான "ஸ்பைடர்" கலவையான விமர்சனம் வந்தாலும் உலகெங்கும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஸ்பைடர் படத்துக்காக விளம்பரம் படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்குவீர்களா? என்று ஒரு கேள்வி எழும்பியது அதில் சற்றும் யோசிக்காமல் செய்வேன் என்று கூறினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த கேள்வியை மீண்டும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கேட்டபோதும் பண்ணுவேன் விரைவில் ஆயத்தம் நடக்கபோகிறது என்று கூறினார்.

இதனையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ்க்கு மூன்று சூப்பர் ஸ்டார் ஜோடிகளை வைத்து இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் விஜய் மற்றும் மகேஷ் பாபு, அஜித் மற்றும் மகேஷ் பாபு, அஜித் மற்றும் விஜய் இந்த மூன்று ஜோடிகளின் இயக்கம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பியதில் சற்றும் யோசிக்காமல் விஜய் மற்றும் மகேஷ் பாபு இவர்களை படம் இயக்கவேன் என்றும் அதில் தமிழுக்கு விஜய் ஹீரோ மகேஷ் பாபு வில்லன் என்றும் தெலுங்கில் விஜய் வில்லன் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல இந்த கூட்டணிக்கும் தெலுங்கில் வில்லனாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார் தளபதி என்று கூறினார்.

அதுமட்டுமல்ல ஏ.ஆர்.முருகதாஸ்க்கு ஒரு கண்டிஷனும் போட்டுள்ளார். அதாவது இந்த படத்தில் மகேஷ் பாபு நடித்தால் மட்டுமே தான் நடிப்பேன். வேறு எந்த ஹீரோவுடனும் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கறாராக சொல்லிவிட்டதாக முருகதாஸ் கூறினார்.

ஸ்பைடர் ஆடியோ விழாவில் பேசிய மகேஷ் பாபு... தளபதி விஜயின் படத்தை பற்றி பேசினார் துப்பாக்கியை பற்றி பேசியுள்ளார். எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனால் 'துப்பாக்கி' படத்தைப் பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். என கூறியது குறிப்பிடத்தக்கது.