விஜயின் பிகிலுடன் மோத தைரியமாக களமிறங்கியது கார்த்தி நடித்த கைதி. அந்தத் தன்னம்பிக்கை வீண்போகவில்லை. தொடர்ந்து ப்ளாப் கொடுத்து வந்த கார்த்தி கைதியின் மூலம் விஜயை இரண்டாவது முறையாக வீழ்த்தி இருக்கிறார்.

 

இந்தாண்டுக்கான தீபாவளி வெளியிடுகளாக பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிகில் நடிகர் விஜய் நடிப்பில், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டுள்ள கதை. நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வரும் கைதி சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. விஜய்யுடன் கார்த்தி போட்டியா? என்ற சலசலப்புகள் எழுந்தன. ட்விட்டரில் இது குறித்த விவாதங்களும் அரங்கேறின. ஆயினும் கதையை நம்பி களத்தில் இறங்குவதாக தயாரிப்பாளர் தரப்பு மற்றும் இயக்குனர் கூறியிருந்தார்.

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. வித்யாசமான படைப்புகளுக்கு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் கைக்கொடுப்பார்கள் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள கைதி திரைப்படம் மற்றொரு சான்றாக விளங்கியுள்ளது. காலை படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கைதி திரைப்படம் பிரமாதமாக இருப்பதாக கருத்து கூறியுள்ளனர். கார்த்தியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.  வெவ்வேறு கதைக்களங்களுடன் வெளி வந்த இந்த இருபடங்களில் பிகில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
இதன்மூலம் விஜயின் பிகில் கார்த்தியின் கைதியிடம் சரணடைந்ததால் இரண்டாவது தடவையாக விஜய்யை மண்ணை கவ்வ வைத்துள்ளார்.  முதலாவதாக காவலன் படத்தை சிறுத்தை படம் மூலம் தோற்கடித்துள்ளார்.  இதனை கார்த்தி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  அட்லியை மலைபோல் நம்பி இருந்தார் விஜய். கடைசியில் இப்படி கைதியிடம் மண்ணைக்கவ்வ வைத்து விட்டாரே அட்லீ என விஜய் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.