Vijay this is ultimate mass bulls and the king theri mersal

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிட்டுள்ளனர். 

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மூன்று வேடத்தில் நடிக்க, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

பெயரிடல் இருந்த இந்நிலையில் இப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். முரட்டு காளைகள் பின்னணியில் இருக்க மெர்சலாக போஸ் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் பெயர் கூட மாட்டின் வால் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இப்படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆசை பட்ட மாதிரியே முருக்கு மீசை சிருச்ச முகம் தளபதி மெர்சல் தான் என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

மேலும் 3 கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.