தளபதி 64’படத்துக்காக தனது சினிமா பாலிசிகள் அத்தனையையும் தளர்த்தி புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார் நடிகர் விஜய். தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது நெருங்கிய உறவினர் என்பதாலும் தனது ஆரம்பக் கட்டத்தில் தொடர்ந்து மூன்று படங்கள் தயாரித்து பெரும் தொகையை இழந்தவர் என்பதாலும் இப்படத்துக்கு அவர் பல சலுகைகள் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

விஜய்க்கு ’பிகில்’படப்பணிகள் முற்றிலும் முடிந்துள்ள நிலையில் ‘தளபதி 64’பட பூஜைகள் இன்று மிக எளிமையாகத் துவங்கின. அந்த பூஜை குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம்,...தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா, ரசிகன் ஆகிய 3 படங்களை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.தற்போது நான்காவது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.ராக்ஸ்டார் அனிரூத் கத்தி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை கவனிக்கிறார்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சம்மர் 2020 இல் திரைக்கு வரவிருக்கிறது...என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் தனது நெருங்கிய உறவினர் என்பதால் தன்னை நோக்கி வளர்ந்துவரும் விஜய் சேதுபதி உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு இப்படத்தில்  இடம் கொடுத்திருக்கும் விஜய் நேரம்,காலம், சனி,ஞாயிறு என்று எதுவும் பாராமல் 150 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதற்கு முந்தைய படங்களில் விஜய் சனி, ஞாயிறுகளில் கால்ஷீட் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.