Asianet News TamilAsianet News Tamil

Valimai vs Beast : ‘வலிமை’ படைத்த டாப் டக்கர் சாதனையை பீட் பண்ண முடியாமல் பின்தங்கிய ‘பீஸ்ட்’

Valimai vs Beast : பொதுவாக விஜய் படத்தின் டிரைலரோ அல்லது டீசரோ வெளியானால், அது யூடியூப்பில் அதிக லைக்குகள், அதிக பார்வைகளை பெற்ற டிரைலர் என பல்வேறு சாதனைகள் முறியடிக்கும். 

vijay starrer Beast movie trailer failed to beat ajith starrer valimai movie trailer
Author
Tamil Nadu, First Published Apr 3, 2022, 10:54 AM IST

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அடுத்தடுத்து அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், பீஸ்ட் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைப்பார்க்கும் கூர்கா படத்தை பார்ப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

vijay starrer Beast movie trailer failed to beat ajith starrer valimai movie trailer

பொதுவாக விஜய் படத்தின் டிரைலரோ அல்லது டீசரோ வெளியானால், அது யூடியூப்பில் அதிக லைக்குகள், அதிக பார்வைகளை பெற்ற டிரைலர் என பல்வேறு சாதனைகள் முறியடிக்கும். அதன்படி பீஸ்ட் படத்தின் டிரைலரும் பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

பீஸ்ட் படத்தின் டிரைலர் வலிமை பட டிரைலர் சாதனையை முறியடிக்க முடியாமல் பின் தங்கி உள்ளது. வலிமை டிரைலர் வெளியான 3 நிமிடங்களிலேயே 1 லட்சம் லைக்குகளை பெற்றிருந்தது. ஆனால் நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் அந்த இலக்கை அடைய 8 நிமிடங்கள் ஆனது. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக விஜய் ரசிகர்களை கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Beast: விஜய்யின் பீஸ்ட் படத்தில் இதெல்லாம் காப்பியா..? அட்லீயையும் சேர்த்து வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்....

Follow Us:
Download App:
  • android
  • ios